சில சத்தியங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டிய நேரம். யாரையும் யாரும் தூக்கி சுமக்க முடியாது. கூடவே ஒட்டிக் கொண்டிருந்தால் அட்டையை விடவும் மோசமாக எள்ளப் படுவோம்
.பாத்திரம் அறிந்து பாலூற்று!
அவ்வப்போது வரும் தென்றலுக்குதான் மரியாதை.. கூடவே இருக்கும் பிராண வாயுவுக்கு மரியாதை இருக்காது!
எத்தனை நாளைக்குத்தான் ஏமாளியாகவும், கோமாளியாகவும் இருப்பாய் என்று ஏமாற்றினவர்களே கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
தன்னுடைய கலப்பையைத் தூக்கி சகதிக்குள் வீசிவிட்டு ஊரான் கலப்பையைத் தூக்கித் தோளில் வைப்பது நன்றல்ல!
கோபத்தில் கூட சிறிது உண்மையிருக்கும்!
கள்ளச்சிரிப்பில் கிஞ்சித்தும் இருக்காது!
விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினா புரியவில்லை
பிரபஞ்சத்துக்கு நன்றி!